பாதச் சுவடுகளால்
தேய்ந்த தரை
தூசியின் இருளில்
ஒளிந்து கிடந்தது
காலச் சக்கரங்களின்
எல்லையில்
புதிய சுவடுகள் பதிந்த வேளை
வாழ்வின் எச்சமானவையும்
மனவோடை நிலவுகளும்
கோடைத் துளிர் மழையெனத்
தழுவிச் சென்றன
பனிப் பாறை வெடிப்புகளாய்
உருகும் நினைவுச் சுரங்கங்களில்
மூழ்கிச் சிலிர்த்தும்
நிஜ உலகில்
மீளவும் தவழுதல்
விதிக்கப்பட்டதாயிற்று.
எம்.கே.முருகானந்தன்
0.00.0
Advertisements