Category Archives: சேரிக் குழந்தை

சேரிக் குழந்தையின் சுட்டெரிக்கும் பார்வை

தரநிலை

உடைந்து நொருங்கியது
உள்ளம்
ஊடுருவித் துருவி
உள்நுழைந்த பார்வையில்

வீசியது
வெற்றுப் பார்வையா
பீதியில் உறைந்ததா
கசப்பை உமிழ்வதா
சினந்து எரிப்பதா?

தெறித்துப்
பளிச்சிட்டது
திகில் வன்மம் சினம் …
உள்ளார்ந்த வலியின் தீவிரம்
அதிர வைத்தது

சூயிங்கம் மெல்லும் வாயை
கண்களில் மறைந்த தேடலை
மண்ணதிராத என் காலடிகளை
கைகளில் பிடித்திருந்த கருவியை
துருவித் தேடின அதன் கண்கள்.

தட்டிப் பறிப்பானோ
அள்ளிச் செல்வானோ
எட்டியது
அவமே பறிபோகுமா
எண்ணி தயங்கியதோ!

நாசியை கௌவி
நாறியது
குப்பையில் மிதக்கும்
சோத்துப் பார்சல்
கனத்தது மனம்
பசித்த பூனையின் வலியுணர
தளர்ந்தன
கமரா பற்றிய கரங்கள்
.

எம்.கே.முருகானந்தன்.

.. .. .. ..

Advertisements