Category Archives: தீபாவளி

தீபாவளியில் நடைபயில்தல்

தரநிலை

20141022_061300-002

பொழுது புலர்ந்தது
மெல்லென ஆதவன் எழுந்து
தண்ணொளி பூசிட

20141022_063118_Richtone(HDR)

சில்லென மென்காற்று
மேனி தழுவிட
பூரித்த மனசுடன்
நடை பயில்தல்
இனியது

20141022_063206_Richtone(HDR)-001

இருதயத் துடிப்பு
இதமாய் அடையும்
சுவாசக் காற்று
சுவாத்தியமாகும்
மூட்டுகள் முக்கி முனகாது
வளைந்து நெளிந்து
இயங்குதல் செய்யும்
தசைகள் திரளும்
சவ்வுகள் நெகிழும்
மனசுடன் மேனியும்
நலமாகும்

20141022_063239_Richtone(HDR)-001

இன்றைய பொழுதும்
இனிப் புலரும் தினங்களும்
இனிதாய் அமைய நல்வாழ்த்துக்கள்
அனைத்து நண்பர்களுக்கும்
என்மனம் இனிய
தீபாவளி நல்வாழ்த்துக்கள்

எம்.கே.முருகானந்தன்

00.0.00