Category Archives: பெண்மை

கருவலை மிதந்து வந்து வாழ்வினைப் பிச்சை பெற்றார்

தரநிலை

ஆதவனும் மங்கிப் போவான்

சுடர்மிகு வானும் கறுத்துப் போகும்.

இடர்நிறை வாழ்வு தன்னை

நிகரிலாப் பொறுமையோடு

நாளெலாம் நாரி வளைய

நசுங்கிடும்

இவள் வாழ்வு கண்டு.

பொழுதெலாம் நுகர்ந்த பின்னே

போதையில் தோயும் கயவன்

பதறிடத் தவிக்க விட்டு

பல்லக்கில் பயணமாவான்.

நாளெலாம் மேடையேறும்

பொல்லாக்கு காணும் வேளை

சூரியனும் நாணம் கொள்வான்.

20140515_074524-002

போரிடப் புறப்படு பெண்ணே

உன் விழிகளை வில்லாய் வளைத்து

வீசிடு ஆழத் தைக்க.

பெண்ணெனும் பேதையெனத்

தயங்கி நீ மருள வேண்டா

பூமியில் பிறந்தோரெல்லாம்

உந்தன் கருவலை

மிதந்து வந்து

வாழ்வினைப் பிச்சை பெற்றார்.

இங்கினி உன்னை மேவும்

திடம் யாருக்கு அவனியில் உண்டு.

20140515_075509-001

எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0

உள்ளே சூலகம் பெண் மனது போல …………

தரநிலை

நிர்மல வானில் தவளும்
தூய வெண் மேகம்
பசும் சோலையில்
வெண் மலர்.
விறைத்து நீளும் குறியென
எழுந்து நிற்கும் ஸ்டைல் (style)
அதன் நுனியில்
அண்டச் சுரப்பியென ஸடிக்மா (Stigma).

SDC14437-001
உள்ளே சூலகம் (Ovary)
பெண் மனது போல
மறைந்திருக்கும்
அவள் மனதைத்
மிருதுவாய் தீண்டுதல்
கொள்ளை இன்பம்

SDC14439-001

திறந்த பொழுதில் சூல் கொள்ளும்
காயாய் கனியாய் விளை தள்ளும்
பெண்மையின் பூரிப்பு
அதில் மிளிரும்.

SDC14444-001

எம்.கே.முருகானந்தன்

0.00.0