சிரம் தாழ்த்தி முகம் மறைத்து
கண் சிமிட்டுகிறாள்
வண்ண மலர் மகள்
உளம் நிறைந்து
கசிந்துருகும்
காதலை ஆதவனிடம்
கொண்டு செல்ல
மஞ்சுகளை
தூதுக்கு அழைக்கின்றாள்
வாஞ்சை கொண்ட மஞ்சுகளோ
மலர்வதன இதழ்களில்
முத்தமிட இச்சை கொண்டு
மணமாலை கரமேந்தி
ஆசை பொங்க
விரைந்து வருகின்றன
தூதுவரின் வஞ்சம்
புரியாத
வெள்ளையுள்ள
வண்ணச் சிங்காரிகளே
அவதானம்.
பனியுறையும் வெண் சருமங்களும்
ஞாயிறு உதிக்கும் தேசத்தவரும்
பொட்டுக்குள்ளால்
எட்டிப் பார்க்கும்
அண்டை வீட்டாரும்
தூது வந்து
ஏய்ந்து போன பின்னுமா
கண் திறக்கவில்லை?
எம்.கே.முருகானந்தன்
0.0.0.0.0.0
Advertisements