Category Archives: மனத்திடம்

கரம் உயர்த்தி வான் அளைய வருவேன்…

தரநிலை

“தறுக்கணித்துப் போனாய்
நிலமடங்கித்
தரை தவழ்ந்து
தலை கவிழ்ந்து
வாயடங்கிக் கிட” வென
திமிர்ப் பேச்சு வேண்டாம்.

SDC13629-002

திடமிருக்கு மனம் நிறைய
உடலிருக்கு அயராதுழைக்க
கரம் உயர்த்தி சிறகசைத்து
வான் அளைய வருவேன்
தலை குனியும்
வாழ்வெனக்கில்லை
தலைக்கனம் கொள்ளாதே
உயர்ந்திடுவேன்
நிசம் இது.

எம்.கே.முருகானந்தன்