Category Archives: மந்தை மாடுகள்

மந்தை மாடுகளா நாம் ?

பதிவின் வடிவம்

நடை பவனி
போகின்றன.
வீதி ஒரமாக
ஒன்றின் பின் ஒன்றாக
மற்றவர்களுக்கு இடைஞ்சல்
கொடாது
விரையும் வாகனங்களுக்கு
வழி விட்டு..
மேய்ப்பவனின் ஆணைக்கு
செவிமடுத்து

கொடுத்து வைத்தவை
நல்ல மேய்ப்பர்கள்
கிடைத்தது அவற்றிற்கு .

பாவிகள் நாங்கள்
எங்கள் மேய்ப்பர்களுக்கு
மக்கள் பற்றிய சிந்தனை
எள்ளவும் இல்லை
உணர்ச்சி பேச்சுகளால்
உருவேற்றி
தங்கள் கதிரைகளை
உறுதிப்படுத்துவது
ஒன்றே குறி.

எம்.கே.முருகானந்தன்