Category Archives: டென்டர்

தெருவெள்ளம் சுவிஸ்வரை எகிறிப் பாயும்

தரநிலை

சோவென மழை
வானத்திலிருந்து பூமிக்கு
வீதி சமைக்கும்
வீதியோரச் சாக்கடைகள்
நிரம்பி வழிந்து
சமுத்திரத்திற்கு
பாதை வகுக்கும்

வீதியினை மேவிப் பாயும்
பெரு வெள்ளம்
அருகுள்ள வீடுகளில்
பிணி விதைத்து சாவறுக்கும்
வீதி அமைக்க
டென்டர் பெற்றோர்
வங்கிக் கணக்கு
சுவிஸ்வரை
எகிறிப் பாயும்

எம்.கே.முருகானந்தன்

0.0.0

Advertisements