காலைக் கடன் கழித்தல்
கனபேருக்கு கடும் துன்பம்
கடுக்காய்ப் பேதி குடித்தாலும்
கடுகளவும் கழியாது
மூச்சடக்கி முக்கித் தள்ளினால்
காற்று வீசும் நாற்றமாய்.
கக்கா கழியாது.
ஆனால் இவரோ
தாவர போசனம்
தாரளாமாக உண்பார்
பழங்கள் காய்கறிகள்
எல்லாமே கடித்துண்பார்
கடைத்தீனி கிடையாது
பொரித்தலும் வதக்கலும்
ஆகாது இவருக்கு.
முக்கமால் முனகாமல்
பெருமூச்சு வாங்காமல்
மலவாசல் அரிக்காமல்
மூலம் கடுக்காமல்
மலத்தோடு இரத்தம் பொசியாமல்
நிதம் மலங் கழிக்கும் ஆனந்தம்
யானை நத்தைக்காகும்
உங்களுக்கும் ஆக வைக்கலாம்
நாவடக்கினால்.
எம்.கே.முருகானந்தன்.
0..0..0