Category Archives: பாதசாரி

பாதையில் ஓர் பாதசாரி

பதிவின் வடிவம்

பாதையில் ஒரு பாதசாரி

பக்குமாய் நடக்கிறார்

வீதிச் சட்டங்களைக்

விபரமாக அறிந்ததனால்

மெதுநடை போடுகிறார்

கரையோரமாக..

வலது புறம்

பாதையில் ஓர் பாதசாரி

பெருவீதியது

சோளக் காற்றாய்

சிறீ வரும் வாகனங்கள்

அடிபட்டால்

அக்கணமே

சிரம் பறக்கும்

காற்றில் கூரையாய் சிறகடித்து.

 உயிர் பிரியும்.

0.0

தரை பார்த்து

வரும் வாகனம் அவதானித்து

தெருக்கடக்க முனைவதனால்

பயமில்லை. உயிர் தப்பும்.

இவர்போல நாம் வாழ்ந்தால்

இனியில்லை விபத்துக்கள்

தெருவீதிகளில்.

எம்.கே.முருகானந்தன்

0..0..0..0..0..0

Advertisements