Category Archives: புகைப்படங்கள்

குடையென இவள் …

பதிவின் வடிவம்

கொடியிடை
மலையென முலை
முடிமிகு தலையொடு
மங்கையிவள்
கொடு வெயில் தகிக்கும்
யாழ் மண்ணில்
குடையென தஞ்சமளிக்கும்
ஜாம் மரம்

எம்.கே.முருகானந்தன்

Advertisements

கொல்லப்பட்ட மாந்தரும் தப்பிய நாய்களும்

பதிவின் வடிவம்

12799407_10156599624205268_5316999257291295311_n

தெருவோரம் இவர் போல
பலருண்டு
பசி தீர்க்க
கிடைத்திடுமா ஏதேனும்
அலைந்திடுவார்
தினந்தோறும்
நகர் நீளம்.

பசி மிகுந்து உருவேற
மதி கலங்கும
தினெவெடுக்கும்
கடித்துதறிப்
பதம் பார்க்க.

அசண்டையாய்
அலைவோரின்
கால்கள் இரையாகும்.
பாவம்!
கடியுண்டோர் பாடு.

கடியுண்ட வேதனையுடன்
விசர் நாய்க் கடி
தடுப்பூசி ஆறும்
ஏற்புத் தடை ஊசியும்
வலி பெருக்கும்
போனசாக.

விசர் நாய்கள் போல
சக ஜீவிகளை
கொன்றவர்கள்
இது சகசம்
போரில் என்றார்கள்

இருந்தாலும்
உயிர் பறிக்கும்
தெரு நாய்களை கொல்வது பாபம்
கபடத் தடைப் செய்த
காருண்யப் புதுமை
இந்த நாட்டில் மட்டும்தான்.

செவிடன் காதில் ஊதிய
சங்காயிற்று
மதங்கள் போதித்த
கொல்லாமை

எம்.கே.முருகானந்தன்

வெளுத்த முடியும் மறைவும் பிறப்பும்

பதிவின் வடிவம்

DSC09414-001பழுத்த இலைகள் உதிர்ந்து வீழும்
அரும்பும் தளிர்கள் வீறு கொள்ளும்
உதிர்ந்து மறையும் பூவிதழ்கள்
தலையை நிமிர்த்தி வானம் நோக்கும்
மொட்டுக்கள்
வரண்ட வயல்கள் நியமமில்லை
பசுமை போர்த்தும் மழையில் தோய்ந்து
குயில்கள் கூவும் காலை வேளை
ஒலிகள் மங்கும் ஆதவன் சாய
நலிந்த உடலின் கனவுகள் சிதையும்
வெளுத்த முடிகள் அந்தி சுட்டும்
சிதைந்து மறைதல் உயிரின் நியதி

18323056059_202b46d781_o-001
வேதனை உண்டு
பிறப்பிலும்
களிப்புகள் அதனை மீறும்
வேதனையுண்டு இறப்பில்
இல்லாதும் ஒழியலாம்
இருப்பினும்
கவலை மட்டும் சூழ்வதேன்
மரணம் நினைந்து

சுழற்சித் தத்துவம்
தெளிந்து கொண்டால்
சூழும் இன்பம்
நித்தியமாக.

20150602_181232_Richtone(HDR)-001

எம்.கே.முருகானந்தன்

0.00.0

அற்ப ஆயுசுப் பாக்கியவான்

பதிவின் வடிவம்

தமது பாலியல் இச்சையை
தீர்க்க முடியாத
ஆண் ஈக்கள்
அற்பாயுசில் இறக்கின்றன
ஆய்வுச் செய்தி இது

16706888678_4a5bf21f9c_z

இச்சைகளைத் தீர்க்க
குஞ்சு குமருகளையும்
மஞ்சத்தில் கிடத்தும்
வஞ்சகர்களுக்கு
கிட்டாதோ
அற்ப ஆயுசு

எம்.கே.முருகானந்தன்

0..0..0

ஒல்லித் தேங்காயும் எரிசிதையும்

பதிவின் வடிவம்

தேடுவாரற்று வீழ்ந்து கிடந்தது
ஒறுப்பான காலத்தில்
நூறு ரூபாவிற்கு
இரண்டு கூடக் கிடைக்காதது
காலடியில் கிடந்ததையும்
கணக்கில் எடுக்கவில்லை
மாந்தர்

20140810_164853_Richtone(HDR)

நீரில் மிதக்கவும்
நீந்திப் பழகவும்
சித்திரை பூக்கையில்
கோவில் வீதியில்
போர்த்தேங்காய் அடிக்கவும்
தேடிய காலங்கள்
கலைந்து போனது

அலைகளால் அணைக்கப்படும்
கடலுடன் கூடலுக்காக
ஏகாந்தமாய்
காத்திருக்கிறது
ஒல்லித் தேங்காய்

20140810_164910_Richtone(HDR)-001

ஊதித் தள்ளிய
புகையில்
கோதாய்ப் போன
நெஞ்சாங் கூடு
எரி சிதையில்
கருகிச் சிதைந்து
சாம்பலாகி
காற்றுடன் சங்கமிக்கக்
காத்திருப்பது போல.

எம்.கே.முருகானந்தன்

ஜீவநதி கவிதைச் சிறப்பிதழ் (மார்கழி 2014) வெளியான எனது கவிதை

email of jeevanathy:- jeevanathy@yahoo.com

IMG_NEW

10806463_1003938229621869_3985299587527647619_n

0.0.0

இடரிலும் மகிழ்வு

பதிவின் வடிவம்

ஆடியடங்கும் வாழ்க்கையடா

அரையிஞ்சி நிலமும்

சொந்தம் இல்லையடா

இருந்தாலும் என்ன

பச்சிலை பரப்பி நடப்பேன்

வண்ண இதழ் விரித்து மகிழ்வேன்

நோக்கும் இதயங்களையும்

மலரை வைப்பேன்

மாடி வீட்டுச் செடி

கற்றுத் தருகிறது

எம்.கே.முருகானந்தன்

0.00.0

பதம் காட்ட நிஜவாழ்வில் உயிர் நீத்தல்

பதிவின் வடிவம்

DSC07901-001

அலை மீது நடை பரப்பி
நீ வருவாய் என
விழி சோரக் காத்திருந்தேன்
நிலையில்லை இவ் வாழ்வு என
நிஜவாழ்வில் பதம் காட்ட
வளரிளம் பருவத்தில்
கரை மீது தனியாக
உயிர் நீத்துக் கிடந்தாய்

DSC07902-001

இவையொண்ண
உயிர் யாகங்கள்
திடமாக நிலை வாழ
கைகொடுக்கும்
உறவுகளுக்கு
என்றெண்ணி
உவர் மண்ணில்
கிடந்த உன் நேர்த்தி
நிறைவேறுமா
என்றாகிலும்.

DSC07904-001

எம்.கே.முருகானந்தன்

0.00.0