Category Archives: புகைப்படம்

ஆடிக் கூழ்

தரநிலை

ஆடிப் பிறப்புடன்
காலை விடிந்தது
ஆனந்தம் ஆனந்தம்
தோழர்களே

11700874_10155823433020268_1113226814005808088_n

ஆடிக் கூழ் இடை
தேங்காய் சொட்டுகளும்
பயறு மணிகளும்
நொறுக்கிடுவது
அச்சச்சோ
அத்தனை சுவை
சொல்லி அடங்குவதில்லை

ஆடிக் கூழுடன்
நாளைப் புலர்ந்திடச்
செய்த திருமதி ஜெயராசா
அவர்களுக்கு
நன்றிகள்

“ஆடிப் பிறப்பிற்கு
நாளை விடுதலை ”
சோமசுந்தரப் புலவரின்
பாடலைப் பாடி
ஓடித் திரிந்த காலங்களின்
நினைவுகளுடன்
பருத்தித்துறையில்
பாரம்பரிய வாழ்வு
இனிக்கிறது.

0.00.0

வெத்திலை போட்ட பத்தினிப் பெண்ணும் மைந்தனும்

தரநிலை

வெத்திலை போட்ட பத்தினிப் பெண்ணு
சுத்தி வந்தாள் தெரு நீளம்
சப்பிய சாறு வடிந்தது
வாயோரம்
மிஞ்சிய எச்சிலை
காரெனத் துப்பியெறிந்தாள்
தெருவோரம்
பச்சிலை போர்த்திய செடிகள்
தோய்ந்தன செங்குருதியில்
நித்தமும் நடந்தது இது
தொடர்கதையாக.

SDC14340

சென்றது காலம்
மாதங்கள் வருடங்களாக
வெத்திலை போட்ட
செவ்விதழ் வாயில் அரும்பின
வெண் புண்கள்
மெது மெதுவாக
அவிஞ்சது வாய்
வருத்தியது நா
தொண்டையில் வலியும்ஆனது
மெல்லவும் முடியாது
தின்னவும் திணறல்
அழுந்தினாள்
வெத்திலைப் பெண்ணு

20140405_090923-001

பசுமைத் தளிர்கள் குளிர்மை வீசின
தெருவோரம்
செழித்தன செடிகள் மதர்த்தன கிளைகள்
நலமாக
மாசுகள் அகன்று சுகந்தம் வீசியது
பாதையோரம்
எச்சில் விலகிய களிப்பில் கானமிசைத்தது
முழுத் தேசம்.

SDC14582-001

ஆனால்
பறைகள் முழங்கின பாடை நகர்ந்தது
மரண ஊர்வலமாக
புற்று நோயில் இற்ற மாதாவின்
மைந்தன் சிந்திய கண்ணீர்
நனைத்தும்
நூர மறுத்துக்
மற்றொரு நாளுக்காய் காத்திருக்கிறது
அவன் வீசிய
தகிக்கும் சிகரெட் துண்டு
அவன் பாடையில் தீ மூட்ட

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0

நாக்கில் புற்று நோய்

தரநிலை

Tongue cancer- நாக்கில் புற்று நோய்

20141110_093213-001

நாக்கின் ஓரமாக இரு சிறு புண்கள்.

சூட்டுப் புண்கள் என எண்ணதீர்கள்.

இத்தகையவை அலட்சியப்படுத்தக் கூடியவை அல்ல.

ஆய்வு கூடப் பரிசோதனையில் புற்று நோய் என்பது நிரூபணமாகி இருக்கிறது.

இது ஒரு மூதாட்டியினது

ஆனால் எவருக்கும் வரக் கூடிய ஆபத்தான நோய்

புகைத்தல் வெற்றிலை சப்புதல் அதிகமாக மது அருந்துவது போன்றவற்றால் வருவதற்கான சாத்தியம் மிக மிக அதிகம்

0.0.0

நாளைய வசந்தத்திற்காய் காத்திரு- முட்டைப்புழு

தரநிலை

முட்டைப்புழு
கூட்டுப் புழு
வளர்புழு
கம்பளிப்புழு
என்ன சொல்லி அழைத்தாலும்
வண்ண வண்ண ஆடை
போர்த்து
மலருக்கு மலர்தாவும்
வண்ணத்துப் பூச்சி நீ
நாளையப் பொழுதில்

0.00.0

பிணியென எண்ணி மாளாதீர்

தரநிலை

எழுந்தால் தலைவலி
சரிந்தால் நெஞ்செரியும்
பேசினால் இளைக்கும்
பெய்தால் சுணைக்கும் மூத்திரம்
உண்டால் வயிற்று ஊதல்

SDC14788-001

கணமும் நிதமும்
நோய் பிணியென
அரட்டாதீர்
சுற்றமும் கழன்று ஓடும்
நட்பும் கலைந்துவிடும்

SDC14784-001
உள்ள நோயல்லாம்
வாய் ஓயாமல்
சொல்லுவர் பலருக்கும்
இல்லை நோய் உடலில்
புழுத்துக் கிடப்பது மனம்தான்

SDC14785-001
வாய்விட்டுச் சிரியுங்கள்
மனம் விட்டுப் பேசுங்கள்
மனிதரை நேசியுங்கள்
அணைக்கக் கை நீட்டுங்கள்
பறந்தோடும் நோயல்லாம்

20131203_081928-001

எனது பேஸ்புக் பக்கத்தில் வெளியான கவிதை

புகைப்படங்கள் :- நோயுற்ற செடிகளும். மீண்டெழுந்த செடியும்

எம்.கே.முருகானந்தன்

00.0.00

அடக்கும் சிறையை உடைக்கும் திமிருடன் அடம்பன்

தரநிலை

கரையெங்கும் கொடி விரித்து
தாய் மண்ணில் வேர் பாய்ச்சி
தடையின்றிப் பரந்தலைந்தவளை
அலங்காரச் சட்டிக்குள்
ஏய்த்துச் சிறையிட்டனர்
எங்கிருந்தோ வந்து
திடலைத் தமதாக்கி
கடைவிரித்தோர்

முடக்கிய தன் வாழ்வை
விலங்குடைத்துத்
தளிர் விரித்து
தரை செழிக்க வேரூன்றி
இனம் பெருக்கி
திமிர் அடக்கத்
திரளும்
காலம் வரும்
விரைந்தே

untitled-001

மற்றொரு பதிவு:- வெளிச்ச வீடும் அடம்பன் கொடியும்

எம்.கே.முருகானந்தன்

0.000.0

மேகங்களே மேகங்களே இன்னும் தாமதம் ஏன்?

தரநிலை

மேகங்களே மேகங்களே
வெண் மேகங்களே வெண் மேகங்களே
விரைந்தெங்கே போகின்றீர்
பறந்து சோர்ந்த சிறகுகளுக்கு
ஓய்வு தேவையென
வேதனை மேவினால்
மலை முகடுகளில்
சற்று தரிந்திருங்களேன்.
Photo1300-001
வெண் மேகங்களே வெண் மேகங்களே
விரைந்தெங்கே போகின்றீர்
சூல்கொண்ட காற்று
சற்று அடங்கிவிட்டால்
நீங்களும் அசையாது நிற்பீர்
வேகங்கொண்டு விரைந்தடித்தால்
கால்களும் மனதை மீறி
வேகங் கொள்ளும்
Photo1301-001
மேகங்களே மேகங்களே
ஓய்நதது போதும்
ஓடிச் செல்லுங்கள்
காய்ந்த மாடாய் காத்திருக்கும்
மனத்தின் வேட்கையை
அவளிடம் சொல்லுங்கள்
Photo1299-001
மேகங்களே மேகங்களே
இன்னும் என்ன தாமதம்?

எம்.கே.முருகானந்தன்

0.0.0.00.0.0.0