Category Archives: புகைப்படம்

நாக்கில் புற்று நோய்

பதிவின் வடிவம்

Tongue cancer- நாக்கில் புற்று நோய்

20141110_093213-001

நாக்கின் ஓரமாக இரு சிறு புண்கள்.

சூட்டுப் புண்கள் என எண்ணதீர்கள்.

இத்தகையவை அலட்சியப்படுத்தக் கூடியவை அல்ல.

ஆய்வு கூடப் பரிசோதனையில் புற்று நோய் என்பது நிரூபணமாகி இருக்கிறது.

இது ஒரு மூதாட்டியினது

ஆனால் எவருக்கும் வரக் கூடிய ஆபத்தான நோய்

புகைத்தல் வெற்றிலை சப்புதல் அதிகமாக மது அருந்துவது போன்றவற்றால் வருவதற்கான சாத்தியம் மிக மிக அதிகம்

0.0.0

Advertisements

நாளைய வசந்தத்திற்காய் காத்திரு- முட்டைப்புழு

பதிவின் வடிவம்

முட்டைப்புழு
கூட்டுப் புழு
வளர்புழு
கம்பளிப்புழு
என்ன சொல்லி அழைத்தாலும்
வண்ண வண்ண ஆடை
போர்த்து
மலருக்கு மலர்தாவும்
வண்ணத்துப் பூச்சி நீ
நாளையப் பொழுதில்

0.00.0

பிணியென எண்ணி மாளாதீர்

பதிவின் வடிவம்

எழுந்தால் தலைவலி
சரிந்தால் நெஞ்செரியும்
பேசினால் இளைக்கும்
பெய்தால் சுணைக்கும் மூத்திரம்
உண்டால் வயிற்று ஊதல்

SDC14788-001

கணமும் நிதமும்
நோய் பிணியென
அரட்டாதீர்
சுற்றமும் கழன்று ஓடும்
நட்பும் கலைந்துவிடும்

SDC14784-001
உள்ள நோயல்லாம்
வாய் ஓயாமல்
சொல்லுவர் பலருக்கும்
இல்லை நோய் உடலில்
புழுத்துக் கிடப்பது மனம்தான்

SDC14785-001
வாய்விட்டுச் சிரியுங்கள்
மனம் விட்டுப் பேசுங்கள்
மனிதரை நேசியுங்கள்
அணைக்கக் கை நீட்டுங்கள்
பறந்தோடும் நோயல்லாம்

20131203_081928-001

எனது பேஸ்புக் பக்கத்தில் வெளியான கவிதை

புகைப்படங்கள் :- நோயுற்ற செடிகளும். மீண்டெழுந்த செடியும்

எம்.கே.முருகானந்தன்

00.0.00

அடக்கும் சிறையை உடைக்கும் திமிருடன் அடம்பன்

பதிவின் வடிவம்

கரையெங்கும் கொடி விரித்து
தாய் மண்ணில் வேர் பாய்ச்சி
தடையின்றிப் பரந்தலைந்தவளை
அலங்காரச் சட்டிக்குள்
ஏய்த்துச் சிறையிட்டனர்
எங்கிருந்தோ வந்து
திடலைத் தமதாக்கி
கடைவிரித்தோர்

முடக்கிய தன் வாழ்வை
விலங்குடைத்துத்
தளிர் விரித்து
தரை செழிக்க வேரூன்றி
இனம் பெருக்கி
திமிர் அடக்கத்
திரளும்
காலம் வரும்
விரைந்தே

untitled-001

மற்றொரு பதிவு:- வெளிச்ச வீடும் அடம்பன் கொடியும்

எம்.கே.முருகானந்தன்

0.000.0

மேகங்களே மேகங்களே இன்னும் தாமதம் ஏன்?

பதிவின் வடிவம்

மேகங்களே மேகங்களே
வெண் மேகங்களே வெண் மேகங்களே
விரைந்தெங்கே போகின்றீர்
பறந்து சோர்ந்த சிறகுகளுக்கு
ஓய்வு தேவையென
வேதனை மேவினால்
மலை முகடுகளில்
சற்று தரிந்திருங்களேன்.
Photo1300-001
வெண் மேகங்களே வெண் மேகங்களே
விரைந்தெங்கே போகின்றீர்
சூல்கொண்ட காற்று
சற்று அடங்கிவிட்டால்
நீங்களும் அசையாது நிற்பீர்
வேகங்கொண்டு விரைந்தடித்தால்
கால்களும் மனதை மீறி
வேகங் கொள்ளும்
Photo1301-001
மேகங்களே மேகங்களே
ஓய்நதது போதும்
ஓடிச் செல்லுங்கள்
காய்ந்த மாடாய் காத்திருக்கும்
மனத்தின் வேட்கையை
அவளிடம் சொல்லுங்கள்
Photo1299-001
மேகங்களே மேகங்களே
இன்னும் என்ன தாமதம்?

எம்.கே.முருகானந்தன்

0.0.0.00.0.0.0

தைப்பொங்கல் பட்டம்

பதிவின் வடிவம்

அனைவருக்கும் எனது இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

பட்டம் ஏற்றுபவர்களுக்கு
தைப்பொங்கலுக்காகக் காத்திருப்பார்கள்.
அக் காலம் விசேடமானது.
வாடைக்காற்று வீச
வானில் மேலெழுந்து
பாயும் பட்டங்கள்
பட்டாம் பூச்சிகளாகமின்னிடும்
அழகு வார்த்தைகளில் அடங்காது.
குழந்தைகளாக பட்டம் ஏற்றிய நினைவுகள்
பட்டங்கள் மேலெழுந்து
பறப்பது போலக் கிளர்ந்த எழும்.

கவிஞர் யாழ்ப்பாணனனது கவிதை ஒன்றை இங்கு பகிர்கிறேன்.

SDC12893-001

பட்டம் ஒன்று பறக்குது பார்
பனையின் உயர நிற்குது பார்
வெட்டவெளியில் விந்தையுடன்
விளையாட்டுக்கள் புரியுது பார்

DSC02891-001
குத்துக் கறணஞ் சிலபோடும்
குதித்துக் கிளம்பி வானேறும்
பத்து முழுத்துப் பாம்பெனவே
பாங்குடன் நின்றும் அசைந்தோடும்.

SDC14084-002
தம்பி வந்து பட்டம் பார்
தாவிக் குதிக்கும் அதுவோ பார்
நம்பி உனது கைதனிலே
நானுங் கயிற்றைத் தரமாட்டேன்.

SDC12909-001
ஐயோ எனது பட்டமெங்கே
அறுத்துக் கொண்டே ஓடுதடா
கையோடிங்கு சில முழத்துக்
கயிறுதானே காணுதடா.

DSC02892-001

இது கவிஞர் யாழ்ப்பாணனனது கவிதை.

எனது பிறந்த ஊரான வியாபாரிமூலைச் சேர்ந்த திரு.வே.சிவக்கொழுந்து என்ற பெயருடைய அவரது கவிதை நூலான ‘மாவைக்கு மாலை” யிலிருந்து எடுக்கப்பட்டது.

நூல் வெளியானது ஆகஸ்ட 1948 ல் ஆகும்.

SDC14209-002

0.0.0.0.0.0.00

காதலிப்போம்! தாவரங்களை

படம்

ஒளிரும் பிரகாசமாக
நீல வானம் மேலே
பசுமை மரங்கள் அருகே
மனதிற்கு இனிய நண்பராக
நெருங்கி வருகிறார்கள்
திளைத்து நீந்துவோம்
வசந்தம் பொங்கும்
வாழ்வில்.

கருகிப் பொசுங்கிடாது
காத்துப்
பூவுலகில்
பசுமையை பேண
பதியலிடுவோம்
புதிது புதிதாக நாட்டுவோம்.
பாசனம் செய்வோம்
காதலிப்போம்
தாவரங்களை

0.0.0.0.0.0