Category Archives: வரிகள்

கழிந்தன

பதிவின் வடிவம்

கழிந்தன நாட்கள்

வீசியெறிந்த கூழ் முட்டைகளாக

கசங்கிய கடதாசி தாள்களாகவும்.. ..

மட்டை போட்டு மூடி

பத்திரமாக பாதுகாத்தவையும் இருக்கிறது தான்.

இறக்கை கட்டி பறந்த

வானமே எல்லையென சுகித்த பொழுதுகளும்

இல்லாமல் இல்லை.

புதிய நாள் பிறக்கிறது

புது வருடமென நாமம் சூட்டி

கசப்பதும் கண்ணீர் மல்க வைப்பதும்

நாவூற சுவைப்பதும் மகிழ்வதும்

விதியின் கையில் இல்லை

இறைவன் எனப் பெயர் சூட்டப்பட்டவனும்

அருள் பொழிய மாட்டான்.

ஆவதும் அழிவதும்

சிரிப்பதும் அழுவதும் எம் கையில்

மட்டும் தான்

இனிய புத்தாண்டு ஆகட்டும்

உங்கள் முயற்சியில்

வாழ்த்துகள்

எம். கே.முருகானந்தன்

சிதைந்த படகும் அரும்பும் காதலும்

பதிவின் வடிவம்

சொல்ல எதுவுமில்லை

பார்த்துணர நிறையவே உண்டு.

நினைவுகள் கிளர்ந்து விட்டால்

பரவசம் சொல்லியடங்காது.

பார்வை புதிது பயணம் தெளிவு

பதிவின் வடிவம்

பார்வை புதிது
பயணம் தெளிவு

18760213458_79c099b359_o-001

 

கசந்த காட்சிகள்
நீசக் கதிர் வீச்சுகள்
மூப்புடன் மோதவும்
ஆடையெனப் படர்ந்து
மழுங்கடித்தன
வீச்சு எல்லையை
நீண்ட பயணத்தில்

மங்கியது பார்லை
விஞ்சியது ஞானம்
அஞ்சி விலகியது மந்தம்
குறு மணித் துளிகளில்
நன்றிகள்
மிருணா மருத்துவருக்கு

எம்.கே.முருகானந்தன்

கரு நாக்கு மேகங்கள்

பதிவின் வடிவம்

20141128_054653_Richtone(HDR)-001

புலர்ந்து ஒளி வீசத் துடிக்கும்
ஆதவனை
முடி மறைத்து
தூசிக்க
திரண்டெழும்
கரு நாக்கு மேகங்கள்
வேண்டாம் சிறுபுத்தி
விலகி மறையுங்கள்
விரைவாக

எம்.கே.முருகானந்தன்

0.00.0

இடரிலும் மகிழ்வு

பதிவின் வடிவம்

ஆடியடங்கும் வாழ்க்கையடா

அரையிஞ்சி நிலமும்

சொந்தம் இல்லையடா

இருந்தாலும் என்ன

பச்சிலை பரப்பி நடப்பேன்

வண்ண இதழ் விரித்து மகிழ்வேன்

நோக்கும் இதயங்களையும்

மலரை வைப்பேன்

மாடி வீட்டுச் செடி

கற்றுத் தருகிறது

எம்.கே.முருகானந்தன்

0.00.0

கரை ஒதுங்கல்

பதிவின் வடிவம்

ஒதுங்கியது மூங்கில்தான்
கடலோரம்
சடலங்கள்
கரை ஒதுங்கல்
காலங்களும்
நிழலாடுகின்றன நினைவுகளில்

DSC07907-001

அரளியும் விளையாட்டுத் திடலும்

பதிவின் வடிவம்

காதலில் தோல்வி கண்டவர்
கதிமோட்சம் காண
தேடி அரைத்து உண்ணும்
அரளி
சுறுசுறுப்பு எறும்புகளின்
விளையாட்டுத் திடலாகும்
விந்தை

15283916438_246ccb26e3_o

எம்.கே.முருகானந்தன்.

ஜிப்பிற்குள்லால் எட்டிப் பார்ப்பது

பதிவின் வடிவம்

ஜிப்பிற்குள்லால் எட்டிப் பார்ப்பது
எப்போதும் அசிங்கமானதல்ல
உடலொளிந்து கண்ணிற் படாது
மறைந்திருப்பது
சுடுகலமல்ல
எனது ஒரே ஒரு
ஆயுதம்

8675083846_38f529c60d_z
காது கொடுத்துக் கேட்டு
சிறு அரவுமும்
பிரித்தறிந்து
நோய் கணித்து
பிணி தீர்க்க
கை கொடுக்கும்
ஸ்டெத்தெஸ்கோப் தான்
அங்கே!

 எம்.கே.முருகானந்தன்

0.00.0

வான்வழி வேர்கள்

பதிவின் வடிவம்

சடை என வேர் பரப்பி
குடை என விரிந்தகன்று
வளியினில் நீர் பருகி
காற்றினில் இரை தேடும்
வான்வழி வேர்கள் இவை.

20140716_152611_Richtone(HDR)-001

விழுது என்றும் பெயர் கொள்ளும்
கிளையினில் பிறந்து தூண் என முறுகி
தரையினில் காலூன்றும் போது.
அவரோகம், சாகாசிவை
எனவும் அழைப்பாரோ?

இலை முளைச்சான்
சதை கரைச்சான் எனும்
கற்றாழை இனத் தாவரம் இது

 0.0.0

பருத்தி நகரின் …

பதிவின் வடிவம்

கடல் வாணிபமும்
ஓடக்கரை அப்பமும்
தட்டைவடையும்
நல்லெண்ணையும்
பிரசித்தம்
பருத்தி நகரின் பெயரிலே

DSC05897-001
புதிய சந்தை எழுந்து
நிற்கிறது நகர் மத்தியிலே
கம்பீரமாக

DSC05900-001
மங்கி மயங்கி
சோர்ந்து நிற்கும்
இந்தத் தோற்றம்
ஓய்வில் கழிந்த
ஞாயிறு மாலை ஆதலில்

DSC03939-001

நிர்மாண வேலை நடைபெற்ற போது கட்டடத் தோற்றம்.

DSC03938-001

ஞாயிறு மாலையில் மூடிக் கிடக்கும் வங்கி

DSC05899-001

எம்.கே.முருகானந்தன்

0.00.0