Category Archives: Murunga

மனிதனும் தேனீயும் முருங்கை மரமும்.

பதிவின் வடிவம்

முருங்கையிலையும் பூவும்

மறைந்திருந்து தலை நீட்டும் முருங்கைக் காய்

அதை மறைத்திட முயலும் பால்வண்ண மலர்கள்

மலருக்கு நோவின்றி நீவியெடுத்துத்

தேனினை அள்ளிச் சென்று

சேமித்தன தம் கூட்டில்

தம் பசி தீர்க்க அல்ல

தம் இராணிக்காக.

ஆயிரம் உயிர்களை பலிகொடுத்து

தேன் கூட்டினைச் சிதைத்து

கவர்ந்தெடுத்தான் மனிதன்

மனதில் வலி உறுத்தாது.

தனக்காக அல்லத்தான்.

விலை கூவி விற்க.

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0

Advertisements