மங்க வைக்கும் சூரியன்

பதிவின் வடிவம்

சூரியனால்  மங்கவும் கூடும்

உலகம்

கண்ணில் தெறிக்கும் 

ஆதவன் ஒளியில்

பங்கம் வரவும் கூடும் 

பார்வைக்கு.

எம்.கே.முருகானந்தன்

Advertisements

வாழ்த்துகள் பெண்களே

பதிவின் வடிவம்


​ஓழிந்து மறைந்திருந்தாலும்

ஒளி சுரந்து எல்லோர் வாழ்வையும்

ஒளி மயமாக்கும் ஆதவன் போல

வாழ்வை களிகொள்ள வைக்கும் வைத்த

மறைந்த அம்மா முதல்

மனைவி மகள்

உடன் பிறப்பு சகோதரிகள்

தொழில் சார் சகோதரிகள்

நண்பிகள்

உறவுகள், உறவுமல்லாத

தெரிந்தும் தெரியாததுமான

பெண்கள் அனைவருக்கும்

மனம் நிறைந்த பெண்கள் தின

வாழ்த்துகள்.

எம்.கே.முருகானந்தன்

முத்துச் சிப்பியல்ல

பதிவின் வடிவம்

முத்துச் சிப்பியல்ல
கடலோரம்
அலை ஒதுங்கிய
மரக்குற்றியில்
பலசேர்ந்து உயர் வாழும்
சிப்பிகள்.

தலைநீட்டியும்
கைவிரித்தும் கால்அசைத்தும்
ஒளிந்து மறைந்தும்
இவை காட்டும்
விளையாட்டுக்கள்
ஏராளம்.

எம்கே.முருகானந்தன்

மயிர்கொட்டியும் அரிப்புணர்வு மாந்தரும்

பதிவின் வடிவம்

மசுக்குட்டி மயிர்கொட்டி
கம்பளிப் பூச்சி
கற்றபிலர்(Caterpillar)
என்ன பெயர் சொன்னாலும்
சும்மா விடப் போவதில்லை.

20151231_142834

அரிக்கும் கடிக்கும்
ஆசை தீரச் சொறிந்தால்
சிவக்கும் தடிக்கும்
சருமம் புண்ணாகும்

பட்டால் மட்டுமின்றி
கண்ணில் தென் பட்டால் கூட
அரிப்பெடுக்கும்
சிலருக்கு.

20151231_142709

தன்னைக் காப்பாற்ற
தன்னுயிர் பேண
அரிப்பெடுக்கும் முடிகளை
கவசமெனக் கொண்டது
மயிர் கொட்டி

 

20151231_142830

அரிப்புணர்வு கொண்ட
நரிக்குண மாந்தரோ
தம்வழிக்கிசையா
நற்குண மாந்தரை
வசைமொழி பேசியும்
பொறி கிடங்கமைத்து ம்
அழித்தொழிக்க முனையும்
வஞ்சகப் பூச்சிகள்.

எம்.கே.முருகானந்தன்

0.00.0

மாங்காய் சப்புவதும் பறிப்பதுவும்

பதிவின் வடிவம்

மாங்காய் சப்புவதென்றால் யாருக்கு தான் ஆசை இருக்காது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருமே சப்பு கொட்டிக் கொண்டு நிற்பார்கள்.

31869214716_c605ef54c5_z

அதுவும் மிளகாய் தூளும் உப்பும் சேர்த்து சப்புவதென்றால் அதன் சுவையே தனி. சொல்லி மாளாது. வாயூறும்.

சிலர் அழகாக சீவிச் சாப்பிடுவார்கள். பலருக்கும் பொறுமை இருக்காது. சப்பிச் சாப்பிடுவார்கள்.

அணில் கொந்திய மாங்காய் களின் சுவை தனிரகம் என்பது பலரது அனுபவக் கூற்று.

31789748921_b64687f2e6_z

இது செம்பாட்டு மாங்காய். பிஞ்சில் படு புளி. அரைவாசி பழுக்க தொடங்கியதுமே சுவை அலாதியாக இருக்கும். நன்கு பழுத்தால் புளிப்பும் இனிப்பும் கலந்த அலாதியான சுவை.

கோப்பையில் சப்புவதற்கு தயாராக இருப்பது பல் கூசும் பிஞ்சு மாங்காய் அல்ல
சற்றே மஞ்சள் பூத்த செம்பழம்.

உப்பும் தூளும் அளவோடு சேர்த்த மாங்காய் துண்டுகள்.

31906469285_7acfc6eea5_z

நா ஊறுகிறது

இப்படிச் சுவைத்து சாப்பிட எனக்கும் இன்று கொடுப்பினை கிட்டியது.

மாங்காய் பறிப்பது என்பது ஒரு கலை.

31533389910_788cc14d17_z

சிறுவயதில் பக்கத்து வீட்டு மாங்காய்களையும் தெரு ஓர மாங்காய்களையும் கல்லடித்து விழுத்துவதும், அசமிடாமல் மரத்தில் ஏறி பிடுங்குவதும் இனிய அனுபவங்கள். பலரும் இது பற்றி எனது முகப்புத்தகத்தில் கருத்தும் இட்டிருக்கிறீர்கள்.

படிக்கச் சென்ற ஆசிரியர் வீட்டு மாங்காய்களையே பிடுங்கிய வீர அனுபவங்களையும் பகிர்ந்திருக்கிறீர்கள்.

அவை நினைவழியா சுக அனுபவங்கள்.

இது தொழில் ரீதியான மாங்காய் பறித்தல்.

31758700362_301e12f607_z

துள்ளிப் பாய்ந்து மரமேறி மந்தி போல மரத்தில் கிளைக்கு கிளை தாவி காய்களை பறிக்கிறார் ஒருவர்.

அவர் வீசும் மாங்காய்கள் நிலத்தில் விழுந்து சேதமடையால் லாகவகமாக ஏந்திப் பிடிக்கிறார் மற்றொருவர்.

அந்தரப்படாமல் அவசரப்படாமல் நிதானமாக லாகவமாக….

பாருங்களேன்

காலமானார், காரணம் புரியவில்லை

பதிவின் வடிவம்

தரையில் கிடந்தவரை
பாடையில் கிடத்தினேன்
காலமாயிருந்தார்
காரணம் புரியவில்லை

14907164_10157759797530268_944012724125861820_n

கணக்கின்றி மதுவருந்தி
கருகியதோ ஈரல்
புகைத்துப் புகைத்து
சுவாசப்பை பறிபோனதோ
வாய் சிவக்க
சொதப்பிய தாம்பூலம்
புற்றெனப் பற்றியதோ

தறுதலைப் பாலுறவில்
தகர்ந்து கேடயம்
எய்ட்ஸ் எனச் சிதைத்ததுவோ
கொறித்த துரித உணவுகள்
கொலஸ்ரோலெனப் படிந்து
மாரடைப்பை வரவேற்றதோ

எதுவானாலும் எமக்கென்ன ?
ஆழ்ந்த இரங்கல்கள் போட்டு விட்டு
அடுத்த வேலையை
பார்க்க வேண்டியதுதானே!!

எம்.கே.முருகானந்தன்

0.00.0

குடையென இவள் …

பதிவின் வடிவம்

கொடியிடை
மலையென முலை
முடிமிகு தலையொடு
மங்கையிவள்
கொடு வெயில் தகிக்கும்
யாழ் மண்ணில்
குடையென தஞ்சமளிக்கும்
ஜாம் மரம்

எம்.கே.முருகானந்தன்