Tag Archives: மருத்துவம்

வெத்திலை போட்ட பத்தினிப் பெண்ணும் மைந்தனும்

பதிவின் வடிவம்

வெத்திலை போட்ட பத்தினிப் பெண்ணு
சுத்தி வந்தாள் தெரு நீளம்
சப்பிய சாறு வடிந்தது
வாயோரம்
மிஞ்சிய எச்சிலை
காரெனத் துப்பியெறிந்தாள்
தெருவோரம்
பச்சிலை போர்த்திய செடிகள்
தோய்ந்தன செங்குருதியில்
நித்தமும் நடந்தது இது
தொடர்கதையாக.

SDC14340

சென்றது காலம்
மாதங்கள் வருடங்களாக
வெத்திலை போட்ட
செவ்விதழ் வாயில் அரும்பின
வெண் புண்கள்
மெது மெதுவாக
அவிஞ்சது வாய்
வருத்தியது நா
தொண்டையில் வலியும்ஆனது
மெல்லவும் முடியாது
தின்னவும் திணறல்
அழுந்தினாள்
வெத்திலைப் பெண்ணு

20140405_090923-001

பசுமைத் தளிர்கள் குளிர்மை வீசின
தெருவோரம்
செழித்தன செடிகள் மதர்த்தன கிளைகள்
நலமாக
மாசுகள் அகன்று சுகந்தம் வீசியது
பாதையோரம்
எச்சில் விலகிய களிப்பில் கானமிசைத்தது
முழுத் தேசம்.

SDC14582-001

ஆனால்
பறைகள் முழங்கின பாடை நகர்ந்தது
மரண ஊர்வலமாக
புற்று நோயில் இற்ற மாதாவின்
மைந்தன் சிந்திய கண்ணீர்
நனைத்தும்
நூர மறுத்துக்
மற்றொரு நாளுக்காய் காத்திருக்கிறது
அவன் வீசிய
தகிக்கும் சிகரெட் துண்டு
அவன் பாடையில் தீ மூட்ட

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0

நாக்கில் புற்று நோய்

பதிவின் வடிவம்

Tongue cancer- நாக்கில் புற்று நோய்

20141110_093213-001

நாக்கின் ஓரமாக இரு சிறு புண்கள்.

சூட்டுப் புண்கள் என எண்ணதீர்கள்.

இத்தகையவை அலட்சியப்படுத்தக் கூடியவை அல்ல.

ஆய்வு கூடப் பரிசோதனையில் புற்று நோய் என்பது நிரூபணமாகி இருக்கிறது.

இது ஒரு மூதாட்டியினது

ஆனால் எவருக்கும் வரக் கூடிய ஆபத்தான நோய்

புகைத்தல் வெற்றிலை சப்புதல் அதிகமாக மது அருந்துவது போன்றவற்றால் வருவதற்கான சாத்தியம் மிக மிக அதிகம்

0.0.0

மூன்றாம் கண் அல்ல இது மூன்றாம் முலை

பதிவின் வடிவம்

மூன்றாவது கண் இருக்கிறதாம்
முற்றும் அறியும் ஞானக் கண்ணாம்
எல்லாம் வல்ல சிவனின் ஞான விழியாம்
என்றெல்லாம் எம் மரபு சொல்லும்

20140221_090504_Richtone(HDR)-001

இருந்தாலும்
மூன்றாம் கையைக் கண்டதில்லை
மூன்றாம் காலும்
மூன்றாம் விதையும் அறிந்ததில்லை
மூன்றாம் காதிருந்தால்
முனகும் இரகசியமும்
சீராய்க் கேட்குமோ

20140221_090504_Richtone(HDR)-002
இவருக்குள்ளது மூன்றாம் முலை
இதென்ன அதிசயம் என்றெண்ணாதீர்
பதினெட்டு ஆண்களில் ஒருவருக்கும்
ஐம்பது பெண்களில் ஒருவருக்கும்
இருக்குமாம் இவ்வாறு
ஆய்வுகள் அவ்வாறு சொல்கின்றன
கண்டு கொள்ளவதில்லை நாம் அவ்வளவே

20140221_090504_Richtone(HDR)-003

முலை இதுவெனப் படம் பிடித்துச் சொன்னதும்
விழி பிதுங்க பார்த்தார்
அதிசயமோ ஆபத்து ஏதும் ஆகுமோ
பயம் பிடித்தது அவரை
இல்லை கட்டியாகாது
புற்று நோயும் வருவதில்லை
சட்டையின்றி திரிந்தால்
மற்றவர் இழிப்பாரோ என்ற
வெட்கம் வரக் கூடும்
அவ்வளவே

20140221_090457_Richtone(HDR)-002

supernumerary nipple
third nipple, triple nipple,
accessory nipple, polythelia
என்றெல்லாம் மருத்துவத்தில் பெயருண்டு

எம்.கே.முருகானந்தன்

0.00.0

விறைத்தெழுந்து வருவாய் ..

பதிவின் வடிவம்

விறைத்தெழுந்து வருவாயென

உளக் கிளர்ச்சியுடன் காத்திருந்தேன்

நிமிர்ந்தெழத் திராணியற்று

சோர்ந்து கிடக்கின்றாய்.

விறைத்தல் செயற் பிறழ்ச்சி

Erectile Dysfunction

மனவிருப்பிருந்தால்

சோரேன் எனும் திடமிருந்தால்

வாழ்க்கை சொர்க்கமாகும்.

Erectile dysfunction விறைத்தெழும் செயல் பிறழ்ச்சி

ஆண்மைக் குறைபாடு கிளிக் பண்ணுங்கள்.

இது 2008 ல் எழுதிய கட்டுரை.

புதிய கட்டுரை விரைவில் வரும்

00.00