Tag Archives: வரிகள்

தேன் உண்ணும் வண்டு

தரநிலை

தேன் உண்ணும் வண்டு
செம் மலரைக் கண்டு
சிறகு மடித்திறங்கியது கண்டு
கண் விழித்தது
கைபேசிக் கமரா…
சிற்றெறும்பாரும்
பார்த்திருந்தார்.

Advertisements

மயிர்கொட்டியும் அரிப்புணர்வு மாந்தரும்

தரநிலை

மசுக்குட்டி மயிர்கொட்டி
கம்பளிப் பூச்சி
கற்றபிலர்(Caterpillar)
என்ன பெயர் சொன்னாலும்
சும்மா விடப் போவதில்லை.

20151231_142834

அரிக்கும் கடிக்கும்
ஆசை தீரச் சொறிந்தால்
சிவக்கும் தடிக்கும்
சருமம் புண்ணாகும்

பட்டால் மட்டுமின்றி
கண்ணில் தென் பட்டால் கூட
அரிப்பெடுக்கும்
சிலருக்கு.

20151231_142709

தன்னைக் காப்பாற்ற
தன்னுயிர் பேண
அரிப்பெடுக்கும் முடிகளை
கவசமெனக் கொண்டது
மயிர் கொட்டி

 

20151231_142830

அரிப்புணர்வு கொண்ட
நரிக்குண மாந்தரோ
தம்வழிக்கிசையா
நற்குண மாந்தரை
வசைமொழி பேசியும்
பொறி கிடங்கமைத்து ம்
அழித்தொழிக்க முனையும்
வஞ்சகப் பூச்சிகள்.

எம்.கே.முருகானந்தன்

0.00.0

குடையென இவள் …

தரநிலை

கொடியிடை
மலையென முலை
முடிமிகு தலையொடு
மங்கையிவள்
கொடு வெயில் தகிக்கும்
யாழ் மண்ணில்
குடையென தஞ்சமளிக்கும்
ஜாம் மரம்

எம்.கே.முருகானந்தன்

ஆடிக் கூழ்

தரநிலை

ஆடிப் பிறப்புடன்
காலை விடிந்தது
ஆனந்தம் ஆனந்தம்
தோழர்களே

11700874_10155823433020268_1113226814005808088_n

ஆடிக் கூழ் இடை
தேங்காய் சொட்டுகளும்
பயறு மணிகளும்
நொறுக்கிடுவது
அச்சச்சோ
அத்தனை சுவை
சொல்லி அடங்குவதில்லை

ஆடிக் கூழுடன்
நாளைப் புலர்ந்திடச்
செய்த திருமதி ஜெயராசா
அவர்களுக்கு
நன்றிகள்

“ஆடிப் பிறப்பிற்கு
நாளை விடுதலை ”
சோமசுந்தரப் புலவரின்
பாடலைப் பாடி
ஓடித் திரிந்த காலங்களின்
நினைவுகளுடன்
பருத்தித்துறையில்
பாரம்பரிய வாழ்வு
இனிக்கிறது.

0.00.0

பார்வை புதிது பயணம் தெளிவு

தரநிலை

பார்வை புதிது
பயணம் தெளிவு

18760213458_79c099b359_o-001

 

கசந்த காட்சிகள்
நீசக் கதிர் வீச்சுகள்
மூப்புடன் மோதவும்
ஆடையெனப் படர்ந்து
மழுங்கடித்தன
வீச்சு எல்லையை
நீண்ட பயணத்தில்

மங்கியது பார்லை
விஞ்சியது ஞானம்
அஞ்சி விலகியது மந்தம்
குறு மணித் துளிகளில்
நன்றிகள்
மிருணா மருத்துவருக்கு

எம்.கே.முருகானந்தன்

கிள்ளை மொழி கிளிகளும் கொள்ளை மாந்தரும்

தரநிலை

16852283868_d21f6fd4d4_z

 

கொஞ்சிக் கொஞ்சி
கிள்ளை மொழி பேசும்
வெள்ளைக் கிளிகள்
கள்ளமில்லா ஒலியில்
கதை அளக்கும்
கருணையில்லா
மாந்தர் சிறை வைப்பார்.

கள்ளம் செய்த மாந்தர்
சிறை வாசம் தவிர்க்க
இழந்த முடி நாடி
புனைவுகள் பெருக்கி
பாதம் நோக அடியளப்பர்.

எம்.கே.முருகானந்தன்

முறிகண்டியில் மூத்திரம் கழித்தல் …..

தரநிலை

20150305_025835-001

முறிகண்டியில்
தூக்கம் கலைந்த வேளை
மூத்திரம் கழிக்கச் சென்றால்
மூக்கைப் பொத்தி
மூச்சையடக்கி
முக்தியடைய வைக்கும்
கழிவு நாற்றம்

கால் கழுவினேன்
கோவில் புக அல்ல
சேறிலும கேடாய் நாறும்
கழிப்பறை அசுத்தம்
செருப்பினின்று நீங்க

கோவில் அமோகம்
கும்பிடுவோர் ஏராளம்
மன மாசு நீங்கி
மகிழ்வுடன் நீடு வாழ

20150305_030005-001

வீதி அருகில்
காசுக் கழிப்பறை
நோயினை விதைத்து
முக்தியை
விரைந்து அழைக்க

எங்கு மறைந்தனர்
உள்ளுர் ஆட்சி சபைiபினர்
சுகாதாரப் பரிசோதகர்கள்
மற்றும் அதிகாரிகள்
மணத்தினில் மாய்ந்து மறைந்தனரோ

கேடு கெட்ட இடத்தில் புக
தெண்டம்
பத்து ரூபாய் வேறு

வாங்குவதில் குற்றமில்லை
மேலும் கேட்டாலும் தப்பில்லை

20150305_030012-001

சுத்தம் பேணினால்
நாமும் நலமடைவோம்
நாடி வரும் புற மாந்தரும்
கேவலமாய் நோக்கமாட்டார்
நம் இனத்தை

எம்.கே.முருகானந்தன்

0.00.0