குரங்காட்டியும் குரங்கும்

பதிவின் வடிவம்

குரங்கும் குரங்கு மனமும்

குரங்கோடு இவன் அலைவான்
நகரடங்கக் குச்சொழுங்கை
தெருவெங்கும்
ஆங்காங்கே குரங்காட்டிப்
சிறுபிள்ளை கவர்ந்திழுக்க.
அப்பிளைப்ளில்
வழிதெருவில் சிறு காசேனும்
கைசேரல் பெரும்பாடாகும்.

நடையோங்கிக் குதி தேய்ந்து
புண்ணாகும் பாதம்
புழுதி தோய்ந்ததில்
குருதி மறைந்து கொள்ளும்.
ஒருபோதும் அரை வயிறும்
நிறையாத கிளிசறைப் பிழைப்பு
இருந்தாலும்
உயிர் பிழைக்க வேறு
வழியேதும் தெரியாது

இவனோடு நிதம் அலையும்
குரங்கிற்கும் கால் வயிறும் நிறையாது.
ஆனாலும்
காண்போரைக் கவர்ந்திழுக்கும்
அலங்காரத்தில்
குறைவேதும் இல்லை.

இருந்தாலும் சுயமாக
கெவர் பற்றி மரந்தாவி
கனிகவர்ந்து
விருப்போடு கொறிக்கும்
விடுதலைப்
பசியடங்கும்
காலம் கனிவதற்குள்
கதிமோட்சம்
கண்டிடுமோ?

எம்.கே.முருகானந்தன்

ஒரு மறுமொழி »

  1. மனம் தாவும் மனித மனம்
    மரம் தாவும் குரங்கு மனம்
    இனம் இரண்டும் ஒன்றாகும்
    இதில் என்ன வேறுபாடு?
    உழைப்பிற்காய் குரங்காட்டி
    உலா வரும் மனிதனிவன்
    பிழைப்புக்காய்தனைவாட்டி
    அழைக்கின்றான்மக்கள்தேடி!

  2. “நடையோங்கிக் குதி தேய்ந்து
    புண்ணாகும் பாதம்
    புழுதி தோய்ந்ததில்
    குருதி மறைந்து கொள்ளும்.”

    குரங்காட்டியின் வாழ்வை,
    உருக்கமான உணர்வுடன் உருவாக்கிய கவிதை மிக அருமை.
    பணி மேலும் தொடரட்டும்…

  3. விடுதலை வேண்டா மந்தி, வாழ்நாள் யாவும் கால்வயிற்றுப் பாட்டுடன். மந்தியாய் மனித மனங்களும் சில. அழகான அர்த்தமுள்ள காட்சிக் கவிதை, பிரமாதம் டாக்டர்.

  4. கெவர் பற்றி மரந்தாவி
    கனிகவர்ந்து
    விருப்போடு கொறிக்கும்
    விடுதலைப்
    பசியடங்கும்
    காலம் கனிவதற்குள்
    கதிமோட்சம்
    கண்டிடுமோ?////////

    அருமை ஐயா, குரங்கு ஆட்டிப் பிழைப்போரும், பாம்பு கொண்டு திரிவோரும், இல்லாமல் போன ஒரு தேசத்திலிருந்து அழைத்துவந்து விட்டது கவிதை என்னை ஊருக்கு. நன்றிகள் பகிர்வுக்கு

பழனிவேல் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி