வீடு நனைகிறது ஓநாய்கள் மலர்கின்றன

பதிவின் வடிவம்

நிலவு எறியும்
தண்ணொளியில்
தோய்கிறது வீடு.
சுவரில் படர்ந்த
ஊத்தைகளை
போர்வையிட்டு
ஒழிக்க முயன்று
இயலாமையில்
துஞ்சியது
மங்கிய மதியின் ஒளி.

DSC01502-002

தன்னுள்ளே
ஊற்றெடுத்து
நிரம்பி வழியும்
அழுக்குப் பாசாங்குகளை
வன்மம் மீதுறும்
ஓநாய்கள்
புன்னகைக்கும் முகமூடிகளால்.
போர்த்திப் போலியாய்
மலர்கின்றன.
நாவினிக்கும் பேச்சுகளால்
சுவையூட்டி
கவிழ்த்து ஒழிக்கக்
காத்திருக்கினறன.

DSC09882-001

போலிகளால்
தம்மெண்ணம் போல்
என்றென்றும்
கோலோச்ச முடிவதில்லை.
அழிவுகளை மறைத்து
மாயவுலகை
படைத்தலும் ஆவதில்லை
முயல்கின்றன. முயலட்டும்.

மதி ஒழிந்த
வானமாய்க் கறுக்கும்
அம் மூஞ்சிகளில்
வீழ்ச்சி உமிழப்படும்.
இது புரியாத ஆரவாரங்கள்
அடங்கும் அப்போது.

எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0

ஒரு மறுமொழி »

  1. ”..புன்னகைக்கும் முகமூடிகளால்.
    போர்த்திப் போலியாய்
    மலர்கின்றன.
    நாவினிக்கும் பேச்சுகளால்
    சுவையூட்டி
    கவிழ்த்து ஒழிக்கக்
    காத்திருக்கினறன…”’—————

    ”…போலிகளால்
    தம்மெண்ணம் போல்
    என்றென்றும்
    கோலோச்ச முடிவதில்லை.
    அழிவுகளை மறைத்து
    மாயவுலகை
    படைத்தலும் ஆவதில்லை
    முயல்கின்றன. முயலட்டும்….”’

    ARUMAI!….அருமை!….அருமை…வரிகள். இனிய வாழ்த்து…
    அன்புடன்
    வேதா. இலங்காதிலகம்.

  2. ”..புன்னகைக்கும் முகமூடிகளால்.
    போர்த்திப் போலியாய்
    மலர்கின்றன.
    நாவினிக்கும் பேச்சுகளால்
    சுவையூட்டி
    கவிழ்த்து ஒழிக்கக்
    காத்திருக்கினறன….”———–

    ”….போலிகளால்
    தம்மெண்ணம் போல்
    என்றென்றும்
    கோலோச்ச முடிவதில்லை.
    அழிவுகளை மறைத்து
    மாயவுலகை
    படைத்தலும் ஆவதில்லை
    முயல்கின்றன. முயலட்டும்….”’

    ARUMAI!……..அருமை!….அருமை…வரிகள். இனிய வாழ்த்து…
    அன்புடன்
    வேதா. இலங்காதிலகம்.

  3. “சுவரில் படர்ந்த
    ஊத்தைகளை
    போர்வையிட்டு
    ஒழிக்க முயன்று
    இயலாமையில்
    துஞ்சியது
    மங்கிய மதியின் ஒளி.”

    அழகிய வரிகள்…
    ஒவ்வொரு வரிகளும் மிக சிறந்த ஆளுமை.
    அழகு .

பின்னூட்டமொன்றை இடுக